Corruption in Tamilnadu
Sunday, 5 June 2016
Tuesday, 3 May 2016
Friday, 11 December 2015
Wednesday, 9 December 2015
Monday, 30 November 2015
Sunday, 29 November 2015
2011..கடன்.. Debt Rs.1Lakh Crore.. 2015..Rs.2Lakh Crore.. WHY ?
நண்பர்களே,
2011 ல் தமிழகத்தின் கடன் - ரூ.1,01,349 கோடி
2015ல் தமிழகத்தின் கடன் - ரூ.2,11,483 கோடி
தமிழகத்தின் கடன்சுமை அதிகரிப்பது ஏன் என்பது குறித்த "புதிய தலைமுறை" டி.வி விவாதத்தில்(26.11.2015) சட்ட பஞ்சாயத்து இயக்கம் பங்கேற்றது..
இந்த விவாதத்தின் வீடியோ: https://www.facebook.com/VilupramSPI/videos/437860649731099/
வீடியோ பார்க்க முடியாதவர்களுக்காக... இந்த விவாதத்தில் நாம் முன்வைத்த கருத்துக்கள்:
- 2015-2016க்கான பட்ஜெட் (ரூ.1,47,287கோடி)
எப்படி செலவிடப்படவுள்ளது.? ( சம்பளம்+பென்சன்=ரூ.59882கோடி(41%), மானியங்கள்,சலுகைகள்=ரூ.59185கோடி(40%), வட்டி=ரூ.17856கோடி(12%),
இலவசங்களை வினியோகிக்க,பராமரிக்க=ரூ.10364கோடி(7%)
- கடந்த 20 ஆண்டுகளில் தாதுமணல், ஆற்றுமணல், கிரானைட், கிராவல்மண் என இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன் மூலம் அரசுக்கு இழப்பு ரூ.30 லட்சம் கோடி ( இந்த ஆண்டு, தமிழக பட்ஜெட் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி. இந்த அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு பட்ஜெட் போடலாம் )
- சினிமாவிற்கு கேளிக்கை வரி: சின்ன பட்ஜெட் படங்கள் வெளியான 1997-1998 காலகட்டத்தில் சினிமாவிற்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி மூலம் பெற்ற தொகை: ரூ.109 கோடி. 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று, பெரிய பட்ஜெட் படம் ஒன்றே ரூ.100கோடியைத் தாண்டும் நிலையில், தமிழ்நாடு அரசு பெற்ற வரித்தொகை வெறும்: ரூ.68 கோடி... காரணம், தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து தரப்பட்ட வரிவிலக்கு... ஒப்பீட்டு அளவில் பார்த்தால், மகாராஷ்டிராவில் 2013-2014 ஆண்டில், கேளிக்கை வரி ரூ.725 கோடி.. 2015-2016 இலக்கு: ரூ.800கோடி.!! .. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே... இதுபோல், எத்தனை துறைகளில் எத்தனை நூறு கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும்... முறையாக இந்த வரிகளை வசூலித்திருந்தால் இவ்வளவு கடன் வாங்க வேண்டி இருந்திருக்குமா..? )
- சென்னை மாநகராட்சியில் சொத்துவரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை(இன்னும் பெரும்பாலான வீடுகள் 1998ல் விதிக்கப்பட்ட சொத்துவரியின் அடிப்படையிலேயெ வசூலிக்கப்படுகிறது.. இதை வசூலிக்க போதிய ஆட்களும் இல்லை என்பது வேறு விஷயம்.)
- முட்டை கொள்முதல் ஊழல்: கடையில் ஒருமுட்டை வாங்கும், பொதுமக்களுக்கே ரூ.3.50 முதல் ரூ.4 வரை முட்டை கிடைக்கிறது. தினமும் 60 லட்சம் முட்டை கொள்முதல் செய்யும் தமிழக அரசு(பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொடுப்பதற்கு) முட்டையை எந்த விலைக்குக் கொள்முதல் செய்கிறது தெரியுமா... ரூ.4.51 !! தினமும் 60 லட்சம் முட்டை வாங்கினால் ரூ.3க்குக் கூட வாங்க முடியவேண்டும். அதிகமானல், ரூ.3.50... ஆனால், 4.51க்கு வாங்கப்படுகிறது... அப்படியானல், ஒரு முட்டைக்கு ரூ.1 கொள்ளையடிக்கப்படுகிறது என்றுதானே பொருள்.... தினமும் 60லட்சம் முட்டை.. தினமும் ரூ.60லட்சம் கொள்ளை.!!!)
வசூலிக்கவேண்டிய வரிகளை வசூலிக்கவில்லை...
இலவசத்திற்கு ஏராளமான செலவுகள் !!
( கடந்த 5 ஆண்டுகளில் மிக்சி,கிரைண்டர்,பேன் இலவசம் கொடுத்த செலவு: ரூ.8418கோடி ; தாலிக்குத் தங்கம்: ரூ.3106 கோடி ; ஆடு-மாடு இலவசம்: ரூ.1113 கோடி ; லேப்டாப்: ரூ.6112 கோடி ; உணவு மானியம்: ரூ.24900கோடி ; மின்சார வாரியம்: ரூ.22,430 கோடி)
மக்கள் நலன் என்பதை விட "ஓட்டு வங்கி" அரசியல்தான் எல்லா திட்டங்களிலும் முன்நிற்கிறது..
2011ல் பொறுப்பேற்ற அரசு ரூ.1 இலட்சம் கோடி கடன் இருக்கிறது என்ற புலம்பலோடு பொறுப்பேற்றது.. இப்போது 5 ஆண்டு ஆட்சி முடியும்போது இந்த கடன் ரூ.2.11 இலட்சம் கோடியாகியுள்ளது...
இவ்வளவு கடன்வாங்கியும் , அரசுப்பள்ளியில் கழிப்பறைகள் கூட இல்லை, அரசு மருத்துவமனைகள் அலங்கோலமாகவுள்ளது... விவசாயிகள்.. நெசவாளிகள் துயரத்தில்...
வேண்டும்... மீண்டும் ஒரு சுதந்திரம்...
To share your comments:Call 8754580274 or write mail to : sattapanchayat@gmail.com
Satta Panchayat Iyakkam